தினத்தந்தி 26.11.2013
பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு சீல் பல்லடம் ஆணையாளர் அதிரடி
பல்லடம்
மத்திய பஸ் நிலையத்தில் தாட்கோ அலுவலகம் அமைந்துள்ளது.
ஆதிதிராவிடர்களுக்காக பல வருடங்களுக்கு முன் பஸ் நிலையத்தில் 10 கடைகள்
கட்டப்பட்டு ஏலத்தின் மூலம் ஆதிதிராவிடர்கள் 10 பேருக்கு ஒதுக்கப்பட்டது.
இதில் வாடகைக்கு கடை எடுத்தவர்கள் 50 சதவீத வாடகை தொகையை தாட்கோவுக்கும்,
50 சதவீத தொகையை பல்லடம் நகராட்சிக்கும் செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில் பல்லடம் நகராட்சி ஆணையாளர் நாராயணன் தலைமையில் வருவாய்
ஆய்வாளர் சசிக்குமார், உதவியாளர்கள் அரிகிருஷ்ணா, செந்தில் ஆகியோர் பல்லடம்
பஸ் நிலையத்தில் தாட்கோ மூலம் ஒதுக்கப்பட்ட 10 கடைகளில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் 10 கடைகளின் வாடகையை கடந்த 1998–ம் ஆண்டு முதல்
செலுத்தவில்லை என்பதும், பல்லடம் நகராட்சி அந்த 10 கடைகளுக்கு வரியும்
விதிக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த 10 கடைகளையும்
அதிகாரிகள் நேற்று மாலை பூட்டி சீல் வைத்தனர்.