தினகரன் 04.02.2014
மாநகராட்சியில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம் 10 மனுக்களுக்கு உடனடி தீர்வு
திருச்சி, – திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ஜெயா தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் தண்டபாணி முன்னிலை வகித்தார்.
இதில் சாலை மேம் பாடு, ஆக்கிரமிப்பு அகற் றம், பழுதடைந்த தெரு விளக்குகளை சீரமைப்பது, கழிவறை மற்றும் பூங்காக் கள் பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர் பாக 10 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர், போக்குவரத்துக்கு இடை யூறாக சாலை மற்றும் முக் கிய வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பழுதடைந்த தெரு விளக்குகளை விரைந்து பழுது நீக்கம் செய்யவும், பொதுமக்களி டம் பெறப் படும் மனுக்கள் மீது உரிய தள ஆய்வு மேற்கொண்டு முழு மையான நடவடிக்கை எடுப்பதோடு, இதுகுறித்து மனுதாரர்களுக்கு பதில் அனுப்ப வேண்டும் என் றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட் டார். கூட்டத்தில், துணை மேயர் மரியம் ஆசிக் மீரா, நகரப் பொறி யாளர் சந்தி ரன், நகர்நல அலுவலர் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.