தினகரன் 02.09.2010
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி இயக்குநர் பணியிடமும் காலி 13 பேரூராட்சிகளில் நிர்வாக அத¤காரி பணியிடங்கள் காலி வளர்ச்சிப்பணிகள் நிறைவேற்றுவதில் சிக்கல்நெல்லை
, செப். 2: நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பேரூராட்சிகளில் 13 நிர்வாக அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.நெல்லை மாவட்டத்தில்
36 பேரூராட்சிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 19 பேரூராட்சிகளும் உள்ளன. பேரூராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், 12வது நிதிக்குழு திட்டம், நபார்டு சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.பேரூராட்சிகளை பொறுத்தவரை நிர்வாக அதிகாரி தான் காசோலை யில் கையெழுத்திட முடியும்
. இதனால் நிர்வாக அத¤காரி இருந்தால் மட்டுமே வளர்ச் சிப் பணிகள் தொய்வின்றி நடைபெறும். இது மட்டுமல்லாது பிறப்பு, இறப்பு சான்று வழங்குதல், புதிய கட்டிட அனுமதி, புதிய வீட்டு வரி ரசீது வழங்குதல், பெயர் மாற்றம் செய்தல், குடிநீர் குழாய்களில் பழுது ஏற்பட¢டால் உடனடியாக பராமரித்தல் என அனைத்து பணிகளுக்கும் நிர்வாக அதிகாரி தான் ஒப்புதல் வழங்க முடியும்.ஆனால் நெல்லை
, தூத்துக்குடி மாவட்டங்களில் 13 நிர்வாக அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. நெல்லை மாவட்டத்தில் சங்கர்நகர், நாரணம்மாள்புரம், களக்காடு, வடக்கு வள்ளியூர், முக்கூடல், மேலச்செவல், சிவகிரி பேரூராட்சிகளில் நிர்வாக அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை முறையே நாங்குநேரி ந¤ர்வாக அதிகாரி பாலுசந்திரசேகர், மூலக்கரைப்பட்டி ஆறுமுகம், மணிமுத்தாறு ராஜேந்திரன், ஏர்வாடி முத்துக்குமார், வீரவநல்லூர் சங்கரன், சாம்பவர்வடகரை சிவகாமிநாதன், ராயகிரி ந¤ர்வாக அதிகாரி வைத்தியலிங்கம் ஆகியோர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர்.இதற்கிடையே கோபாலசமுத்திரம் நிர்வாக அதிகாரி நாராயணன்
, அச்சன்புதூர் நிர்வாக அதிகாரி பால்ராஜ், க¦ழப்பாவூர் நிர்வாக அதிகாரி செண்பகம் ஆகிய மூவரும் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றனர். இந்த பேரூராட்சிகள் கூடுதல் பொறுப்பாக பண்பொழி சுந்தர்ராஜன், வடகரை கீழ்பிடாகை ராஜமாணிக்கம், மேலகரம் லெனின் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம், உடன்குடி, சாயர்புரம் பேரூராட்சிகளின் நிர்வாக அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. எட்டயபுரத்தை கழுகுமலை நிர்வாக அதிகாரி உமர்முகைதீன், உடன்குடியை ஸ்ரீவை குண்டம் மணி, சாயர்புரத்தை ஆத்தூர் தனசிங் ஆகியோர் கூடுதல் பொறுப்பாக கவனிக்கின்றனர்.13
பேரூராட்சிகளில் நிர்வாக அதிகாரி பணியிடங்கள் காலியாக இருப்பதால் இவற்றை கூடுதல் பொறுப்பாக கவனிக்கும் நிர்வாக அதிகாரிகளுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. வாரத்தின் 5 நாட்களில் இரண்டு பேரூராட்சிகளிலும் பாதி நாட்கள் பணியாற்ற வேண்டியுள்ளது. இதனால¢ இரண்டு பேரூராட்சிகளின் வளர்ச்சிப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நிர்வாக அதிகாரியை எதிர்பார்த்து கோப்புகள் தவம் கிடக்கின்றன.எனவே வளர்ச்சிப் பணிகளை விரைவில் செயல்படுத்த ஏதுவாக நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்ப பேரூராட்சி துறையும்
, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.நெல்லை
, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 55 பேரூராட்சிகளை மேற்பார்வைய¤ட நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு உதவி இயக்குநர் அலுவலகமும் இயங்கி வருகிறது. நெல்லை மண்டல உதவி இயக்குநராக பணியாற்றிய சீனிவாசன் கடந்த ஜூலை 31ம் தேதி ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால் உதவி இயக்குநர் பணியிடம் கூடுதல் பொறுப்பாக உதவி செயற்பொறியாளர் சுரேஷிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.