தினகரன் 29.06.2010
திருச்செங்கோட்டில் தமிழில் பெயர் பலகை வைக்க 15 நாட்கள் கெடு வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கைதிருச்செங்கோடு
, ஜூன் 29: திருச்செங்கோட்டில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்று திருச்செங்கோடு நகராட்சி அறிவித்துள்ளது.இது பற்றிய சிறப்புக்கூட்டம் நகராட்சி வளாகத்தில் நடந்தது
. அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு அனைத்து வணிக நிறுவனங்களும் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 15 தினங்களுக்குள் இந்த பெயர்ப்பலகை வைக்க வேண்டும். ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள பெயர்ப்பலகைகள் நகராட்சியால் அகற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் ஆணையர் இளங்கோவன்
, பொறியாளர் ரவி, அனைத்து வணிகர் சங்கத் தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.