தினத்தந்தி 02.07.2013
நெல்லை மாநகராட்சிக்கு குடிநீர் கட்டணம் 15–ந் தேதிக்குள் செலுத்த வேண்டுகோள்
நெல்லை மாநகராட்சிக்கு 2013–2014ம் ஆண்டில் முதல் அரையாண்டுக்கான
சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி மற்றும் பாதாள
சாக்கடை சேவை கட்டணம் ஆகியவைகள் செலுத்துவதற்கு கடைசி தேதி 15–4–2013
ஆகும்.
சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி மற்றும் பாதாள
சாக்கடை சேவை கட்டணம் ஆகியவைகள் செலுத்துவதற்கு கடைசி தேதி 15–4–2013
ஆகும்.
நடப்பு ஆண்டு மற்றும் முந்தைய ஆண்டுகளுக்கான வரிகளை செலுத்தாமல் நிலுவை
வைத்து உள்ளவர்களின் சொத்துக்கள் மீது ஜப்தி மற்றும் குடிநீர் இணைப்பு
துண்டிப்பு முதலான சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நடப்பு அரையாண்டுக்கான சொத்துவரி, காலிமனைவரி, குடிநீர் கட்டணம், கடை
வாடகை மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவற்றை வருகிற 15–ந் தேதிக்குள்
மாநகராட்சி கணினி வரி வசூல் மையங்களில் செலுத்த வேண்டும். வரி
செலுத்தாதவர்களின் பெயர்கள் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பார்வைக்கு
வைக்கப்படும். இந்த தகவலை நெல்லை மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) த.மோகன்
தெரிவித்தார்.