தினகரன் 31.05.2010
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் பாதாள சாக்கடை சுத்தம் செய்ய ரூ.18 லட்சத்தில் நவீன கருவி
தூத்துக்குடி, மே 31: தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய ரூ.18 லட்சத்தில் நவீன கருவி வாங்கப்படுகிறது. இதற்கான தீர்மானம் நேற்று நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டங்கள் மேயர் கஸ்தூரி தங்கம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாநகராட்சி கமிஷ்னர் குபேந்திரன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தெருக்களில் உயரமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகளை பராமரிக்க தேவையான ஹை டிராக் ஏணி வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. மேலும் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய பயண்படும் விதமாக புதிய நவீன இயந்திரமான சீவர் ஜெட்டிங் ராடு மெஷின் என்ற கருவியை வாங்கவும் தீர்மானிக்கப்பட்டு அதற்காக ரூ.18 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கான தீர்மானங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் «ம்ம்பாட்டு பணிகள் தொடர்பான 33 முக்கிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. வழக்கமாக கூச்சல், குழப்பம், அமளிக்கு மத்தி யில் நடக்கும் மாநகராட்சி கூட்டம் இந்த முறை மிகவும் அமைதியாக நடந்தது.