தினகரன் 05.08.2010
அவனியாபுரம் நகராட்சி பகுதியில் 19 ஆயிரம் புதிய வாக்காளர்கள்
அவனியாபுரம், ஆக. 5: அவனியாபுரம் நகராட்சி பகுதியில் புதிய வாக்காளர்களாக சேர கோரி 19 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மொத்தமுள்ள 22 வார்டுகளிலும் புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்காக 19 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். புகைப்படம் மாறுதல், புதிய முகவரி மாற்றம் போன்றவற்றிற்காக 3700 பேர் மனு அளித்துள்ளனர். இந்த மனுக்கள் வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு அவனியாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் சரிபார்க்கப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியல் சேர்ப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.