பல்லடம் நகராட்சி கட்டிடங்களில் ரூ.22 லட்சத்தில் சூரியமின்சக்தி உற்பத்தி கருவி பொருத்த முடிவு
நகராட்சி கூட்டம்
பல்லடம் நகராட்சி கவுன் சிலர்கள் கூட்டம் நகராட்சியில் உள்ள கூட்ட அரங்கில் தலை வர் பி.ஏ.சேகர் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பழனிச்சாமி, ஆணையாளர் (பொறுப்பு) சாந்தகுமார் மற் றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் சாக்கடை வசதி, கழிப்பிடம், ரோடு வசதி, தெருவிளக்குகள், நாய்கள் தொந்தரவு, ரோடுகள் அகலப்படுத்த தோண்டப் பட்ட குழிகள் மூடாமல் இருப் பது, பொது குழாய்களுக்கு அருகே துணி துவைப்பது உள்ளிட்ட குறைகள் குறித்து பேசினார்கள்.
சூரிய ஒளி மின்உற்பத்தி கருவி
கூட்டத்தில், நகராட்சி நிர் வாக ஆணையாளர் உத்தரவுப் படி பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் மேற்கூரையில் சூரிய ஒளியில் இருந்து மின்உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கான செலவை நகராட்சி யின் பொது நிதியில் இருந்து செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி ரூ.5 லட்சம் மதிப்பில் பல்லடம் அண்ணா பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடங் களிலும், ரூ.17 லட்சம் செலவில் நகராட்சி அலுவலக கட்டிடங் களிலும் சூரிய ஒளி மின்உற் பத்தி செய்யும் கருவிகள் பொருத்த முடிவு செய்யப் பட்டது.
மேலும் கிருமி நாசினிகள் மற்றும் கொசு ஒழிப்பு மருந்து களான பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்புத்தூள், பினாயில் வாங்க ஒரு ஆண்டுக்கு ரூ.9 லட்சம் ஒதுக்கீடு செய்வது உள்பட 30 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.