தினகரன் 05.10.2010
கட்டுமான பணி தொடக்கம் ரூ24 லட்சம் செலவில் கிண்டியில் பஸ் நிழற்குடைசென்னை, அக். 5: கிண்டியில் ரூ24 லட்சம் செலவில் 2 புதிய பஸ் நிறுத்தங்களுக்கான கட்டுமானப் பணியை மேயர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
மேயர் மா.சுப்பிரமணியன் தனது 140வது வார்டு உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ24 லட்சத்தை 2 புதிய பஸ் நிறுத்தம் கட்ட ஒதுக்கீடு செய்துள்ளார். இதில், கிண்டி காவல் நிலையம் அருகில் ஒரு பஸ் நிறுத்தமும், கத்திபாரா சாலையில் ஒரு பஸ் நிறுத்தமும் கட்டப்படுகின்றன. இதற்கான கட்டுமானப் பணியை கிண்டி தொழிற்பேட்டை அருகில் மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பணிகள் 3 மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு பஸ் நிறுத்த நிழற்குடைகள் திறக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.