தினகரன் 11.06.2010
நாளை நடக்கிறது குடிநீர் பிரச்னை தீர்க்க 25 இடங்களில் கூட்டம்
சென்னை, ஜூன் 11:பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
பொதுமக்களின் குடிநீர் பிரச்னைகள் தொடர்பான திறந்தவெளிக் கூட்டம் மாதம் தோறும் ஒவ்வொரு பகுதி அலுவலகத்தில் ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடந்து வருகிறது. இந்த மாததிற்கான திறந்தவெளி கூட்டம் 12ம் தேதி நடக்கிறது.
கொடுங்கையூர், தண்டையார்பேட்டையில் பகுதி அலுவலகம்&1, ராயபுரம், வண்ணாரப்பேட்டை பகுதி அலுவலகம் 2, பெரம்பூர், வியாசர்பாடி பகுதி அலுவலகம் 3, கீழ்பாக்கம், அயனாவரம் பகுதி அலுவலகம் 4, அண்ணா நகர், முகப்பேர் பகுதி அலுவலகம் 5, முகப்பேர் கிழக்கு மற்றும் மேற்கு, அண்ணாநகர் பகுதி செயற் பொறியாளர் அலுவலகம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதி அலுவலகம் 6, சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் பகுதி அலுவலகம் 7, தியாகராயநகர், கோடம்பாக்கம் பகுதி அலுவலகம் 8, சைதாப்பேட்டை கோட்டூர்புரம் பகுதி அலுவலகம் 9, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர் பகுதி அலுவலகம் 10 ‘அ’, அடையார், திருவான்மியூர், வேளச்சேரி பகுதி அலுவலகம் 10 ‘ஆ’ ஆகிய இடங்களில் திறந்தவெளி கூட்டம் நடக்கிறது.
பொதுமக்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் தொடர்பான எல்லா பிரச்சனைகளையும் தெரிவிக்கலாம். மேலும் குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள் தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் கேட்டு தெளிவு பெறலாம்.