மாலை மலர் 13.08.2010
பெரிய கோவில் நூற்றாண்டு நிறைவு விழா: தஞ்சை நகர மேம்பாட்டுக்கு ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு; கருணாநிதி உத்தரவுசென்னை
, ஆக. 13- தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-மாமன்னார் ராஜராஜனின் தஞ்சைப்பெரிய கோவில்
1000 ஆண்டு நிறைவடைவதைக் கொண்டாடிடும் வகையில், தமிழக அரசின் சார்பில் தஞ்சையில் செப்டம்பர் மாதம் 25 மற்றும் 26 ஆகிய இரு நாட்களுக்கு விழா நடத்தப்படும் என்று முதல்–அமைச்சர் கருணாநிதி அறிவித்திருந்தார்.இதையொட்டி
, தஞ்சை நகரில் சாலைகள் மேம்பாடு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள் மேம்பாடு, பெரிய கோவில் முதல் மருத்துவ கல்லூரி வரை தெரு விளக்குகள், நவீன சுகாதார வளாகங்கள், ராஜராஜசோழன் சிலை நிறுவப்பட்டுள்ள பூங்காவை அழகு படுத்துதல், பெயர்ப் பலகைகள் மற்றும் தகவல் பலகைகள் அமைத்தல், சாமந்தான்குளத்தினை மேம்படுத்துதல், பெரிய கோவில் அருகிலுள்ள ஜி.ஏ.கால்வாயின் பாலத்தை அகலப்படுத்தல் ஆகிய அடிப்படைப் பணிகளை நிறைவேற்றுவதற்காக ரூ. 25 கோடியே 19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி வழங்கி முதல்–அமைச்சர் கருணாநிதி இன்று உத்தர விட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.