தினகரன் 04.09.2010
மாநகராட்சி புதிய பூமார்க்கெட் கடைகள் ரூழ25 லட்சத்திற்கு ஏலம் மீன் மார்க்கெட் மறு ஏலம் விட முடிவுகோவை
, செப். 4: கோவை மாநகராட்சிக்கு சொந்த மான புதிய பூமார்க்கெட் மற்றும் மீன் மார்க்கெட் கடைகளுக்கான ஏலம் நேற்று நடந்தது.கோவை மேட்டுப்பாளை யம் ரோட்டில் மாநகராட்சி சார்பில் பூமார்க்கெட் அரு கில் நவீன பூமார்க்கெட் கடை கள் அமைக்கப்பட்டுள்ளது
. ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இவ் வளாகம் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. இதற்கான மின் மற்றும் ஓபன் டெண்டர் நேற்று விடப்பட்டது. மொத்தமுள்ள 45 கடைகளும் ரூ.25 லட்சத்திற்கு (ஒரு ஆண்டிற்கு) ஏலம் போனது.உக்கடத்தில் மாநகராட்சி மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது
. செல்வபுரம் பை பாஸ் ரோட்டில் 68 கடைக ளுடன் புதிய மீன் மார்க்கெட் வளாகம் அமைக்கப்பட்டுள் ளது. இதற்கான டெண்டர் (மின் மற்றும் ஓபன்) நேற்று அறிவிக்கப்பட்டது.இந்த
68 கடைகளும் ரூ.19 லட்சத்திற்கே ஏலத்தில் கேட்கப்பட்டுள்ளது.மாநகராட்சி நிர்ணயித்த தொகையை விட
(ரூ.20 லட்சம்) குறைவாக கேட்கப்பட்டுள்ளதால் மீன் மார்க் கெட் மறு ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.