தினத்தந்தி 21.11.2013
வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு முகாம் 25–ந் தேதி தொடங்குகிறது

தூத்துக்குடியில் வீட்டுமனை பட்டா
வழங்கும் சிறப்பு முகாம் வருகிற 25–ந் தேதி தொடங்குகிறது என மாவட்ட
கலெக்டர் ம.ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட
பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உரிய ஆவணங்களின் அடிப்படையில் வீட்டுமனை பட்டா
வழங்கப்பட்டு வருகிறது. தோராய வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக
தூத்துக்குடி டூவிபுரம் 7–வது தெருவில் உள்ள மாவட்ட மக்கள் நல திருமண
மண்டபத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
வருகிற 25–ந் தேதி, அலகு 1 மீனாட்சிபுரம்
மெயின் ரோடு, முதல் தெரு, மேற்கு தெரு, 4–வது தெரு, 3–வது தெரு, ஜெயராஜ்
ரோடு, மீனாட்சிபுரம் கிழக்கு தெரு, பாளையங்கோட்டை ரோடு, டூவிபுரம் 1, 2, 3
தெரு, அலகு–2 பொன்னகரம், பார்வதியம்மன் கோவில் தெரு, 4–வது தெரு, 5–வது
தெரு.
26–ந் தேதி, அலகு–1 பாளையங்கோட்டை ரோடு
மேற்கு, வி.வி.டி.தெரு, மணிநகர் 2–வது தெரு, டூவிபுரம் மெயின் ரோடு,
டூவிபுரம் 1–வது தெரு. அலகு–2 திரவியபுரம் 5–வது தெரு.
27–ந் தேதி, அலகு–1 டூவிபுரம் 2, 3–வது தெரு, அலகு–2 முத்துகிருஷ்ணாபுரம் 3, 4, 5, 6 ஆகிய தெருக்கள்.
28–ந் தேதி, அலகு–1 டூவிபுரம் 2, 3–வது தெரு, அலகு–2 முத்துகிருஷ்ணாபுரம் 1, 2 ஆகிய தெருக்கள்.
29–ந் தேதி அலகு–1 டூவிபுரம் 3,4,5 ஆகிய தெருக்கள், வி.வி.டி.ரோடு. அலகு–2 முத்துகிருஷ்ணபுரம் 1, 2 ஆகிய தெருக்கள்.
30–ந் தேதி அலகு–1 டூவிபுரம் 4, 5, 6 ஆகிய தெருக்கள். அலகு–2 முத்துகிருஷ்ணாபுரம்.
திரேஸ்புரம்
1–ந் தேதி அலகு–1 டூவிபுரம் 5, 8, 9, 10, 11 ஆகிய தெருக்கள், ஜெயராஜ் ரோடு. வி.வி.டி.ரோடு, அலகு–2 பூபால்ராயர்புரம்.
2–ந் தேதி டூவிபுரம் 5, 10, 11 ஆகிய தெருக்கள், வி.வி.டி.ரோடு, அலகு–2 திரேஸ்புரம்.
3–ந் தேதி அலகு–1 கே.வி.கே.நகர், போல் பேட்டை, அலகு–2 பூபால்ராயர்புரம்.
4–ந் தேதி அலகு–2 போல் பேட்டை, அலகு–2 பூபால்ராயர்புரம், திரேஸ்புரம்.
ஆவணங்கள்
மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் முகாமில்
பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட படிவம்–1–ல் குறிப்பிட்டு பட்டாதாரர்
பெயர்களுக்கு முந்தைய கிரைய ஆவணங்கள் (மூலப்பத்திரம்), தொடர் கிரைய
ஆவணங்கள், வில்லங்க சான்றுகள், வீட்டு தீர்வை ரசீதுகள், இறப்பு மற்றும்
வாரிசு சான்றிதழ்களுடன் நேரில் ஆஜராக வேண்டும்.
அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தால்,
உட்பிரிவு இல்லாதவைகளுக்கு 15 நாட்களிலும், உட்பிரிவு உள்ள ஆவணங்களுக்கு
அதிகபட்சமாக 45 நாட்களில் பட்டா வழங்கப்படும்.
இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.