தினகரன் 06.08.2010
சிதம்பரம் நகர அபிவிருத்தி திட்டம் விளக்குகள் அமைக்கும் பணி 31ம் தேதிக்குள் முடிவடையும்
சிதம்பரம், ஆக 6: சிதம்பரம் நகரை அழகுபடுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் முன்னிலை வகித்தார். சிதம்பரம் கோட்டாட்சியர் ராமராஜூ வரவேற்றார்.
சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைத்தல்,கோவிலை சுற்றி உள்ள சாலைகளை சீரமைத் தல், கழிவறைகளை தூய்மை யாக வைத்திருத்தல், தெரு விளக்கு, குடிநீர் போன்றவற்றை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.
அப்போது, நகர அபி விருத்தி குறித்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கருத்துகளை கூறினர். இதில் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் ரத்தினசபாபதி, சிதம்பரம் தாசில்தார் காமராஜ், டிஎஸ்பி மூவேந்தன், நடராஜர் கோவில் செயல் அலுவலர் சிவக்குமார், நகராட்சி ஆணையாளர் மாரியப்பன்(பொ), நகர் மன்றத் தலைவர் பௌஜியாபேகம், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பள்ளிப்படை தனலட்சுமிரவி, சி.கொத்தங்குடி வேணு கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். மேலும் மின்சாரம், சுகாதாரம், வேளாண்மை, பொதுப் பணித்துறை, பேரூராட்சிதுறை, வர்த்தகர் சங்கம், லயன்ஸ் சங்கம், ரோட்டரி சங்கம், உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்திற்கு பிறகு சிதம்பரம் நகரின் முக்கிய வீதிகள், ரயில்வே மேம்பாலம், பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். பின்னர் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: சிதம்பரம் நகரத்தை மேம்படுத்துவதற்காக எனது தலைமையில் நகர மேம்பாட்டு நடவடிக்கைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் மேலவீதி சாலை ரூ. 65 லட்சத்திலும், வேணுகோபால் பிள்ளை சாலை 60 லட்சத்திலும், கவரப்பட்டு சாலை 55 லட்சத்திலும், சிதம்பரம் டிஎஸ்பேட்டை சாலை 1 கோடியே 35 லட்சம் செலவிலும் சீரமைக்கப்பட உள்ளது. சிதம்பரம் காந்தி சிலை அருகில் ரூபாய் 75 லட்சம் செலவில் ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது. சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் நகராட்சி சார்பில் 17 விளக்குகளும், அண்ணாமலை பேரூராட்சி சார்பில் 12 விளக்குளும் கொத்தங்குடி ஊராட்சி சார்பில் 7 விளக்குகளும் என மொத்தம் 28 லட்சம் மதிப்பில் 36 விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. சுமார் 4 கோடியே 20 லட்சம் செலவில் இந்த பணிகள் 31ம் தேதிக்குள் முடிக்கப்படும். சிதம்பரம் மேலவீதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான இடமும் தேர்வு செய்யப்பட உள்ளது. நகரில் குடிநீருக்காக 38 லட்சத்தில் புதிய போர்வெல் அமைக்கப்படும். நகரில் நான்கு வீதிகளும் உள்ள நடைபாதைகளை வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட ஆட்சியர் உறுதி