தினமணி 29.07.2010
ஒசூர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து சுங்கக் கட்டணம் ரூ.32 லட்சம் ஏலம்
ஒசூர், ஜூலை 28: ஒசூர் புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகளுக்கு சுங்கக் கட்டணம், இருசச்கர வாகனம் நிறுத்தக் கட்டணம், கழிப்பிடக் கட்டணம், பொருள் பாதுகாப்பு வாடகைக் கட்டணம் ஆகியற்றுக்கான ஏலம் ஒசூர் சார்–ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
சென்னை நகராட்சி நிர்வாக இணை இயக்குநர் சந்திரசேகர் முன்னிலையில் ஒசூர் நகராட்சி ஆணையர் எஸ்.பன்னீர்செல்வம் ஏலத்தை நடத்தினார்.
இதில் பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகளுக்கான கட்டணம் ரூ.32,40,999-க்கும், கழிப்பிடக் கட்டணம் ரூ.19 லட்சத்துக்கும், இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கான வாடகைக் கட்டணம் ரூ.14,02,800க்கும், பொருள் பாதுகாப்பு அறை கட்டணம் ரூ.1,48,000க்கும் ஏலம் எடுக்கப்பட்டது.