மாலை மலர் 27.08.2010
போடி நகராட்சி சார்பில் 33 வார்டுகளிலும் தெரு பெயர் பலகை நடும் பணி லட்சுமணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்போடி
, ஆக. 27- போடி நகராட்சிக்கு உட் பட்ட 33 வார்டுகளின் தெரு பெயர்கள் பொதுமக்கள் வெளியூர் பயணிகள் அரசு அலுவலர்கள் ஆகியோர் களுக்கு சரிவர தெரியாமல் குழப்பமாக இருந்தது.இதை அறிந்த போடி நகராட்சி ஆணையாளர் சரவணகுமார்
33 வார்டு களின் எல்கையில் அந்த அந்த தெருக்களின் பெயர்களை பொதுமக்கள் பார்வையில் படும்படி இரும்பால் ஆன பெயர் பலகையை நடுவது என்று தீர்மானித்தார். அதன்படி நடப்பட்ட பெயர் பலகைகளை லட்சு மணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.அதற்கான பணியை உடன் மேற்கொண்டு
33 வார்டுகளின் எல்கையில் பெயர் பலகையை இரும்பு கம்பிகள் மூலம் நிறுவினர். இப்பணியை போடி நகர் மன்ற தலைவர் ரதியாபானு, துணைத்தலை வர் சங்கர், நகரமைப்பு அலுவலர் முருகானந்தம் மற்றும் கவுன்சிலர்கள் பார்வையிட்டனர்.