தி இந்து 14.05.2017
வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் ரூ.38 கோடியில் குடியிருப்பு, அலுவலகங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.38 கோடியில்
கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், அலுவலக கட்டிடங்களை முதல்வர் கே.பழனிசாமி
காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கோவை மாவட்டம் குறிஞ்சி நகர்
திட்டப் பகுதியில் ரூ.10 கோடியே 69 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 160
அடுக்குமாடி குடியிருப்புகள், சுகுணாபுரம் திட்டப் பகுதியில் ரூ. 4 கோடியே
33 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 64 அடுக்குமாடி குடியிருப்புகளை சென்னை
தலைமைச் செயலகத்தில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி
காட்சி மூலம் முதல்வர் கே.பழனிசாமி திறந்துவைத்தார்.
இதுதவிர, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி
வட்டம் சின்னாம்பாளையம் கிராமத்தில் ரூ.11 கோடியே 77 லட்சத்தில் 108
அடுக்குமாடி வாடகை குடியிருப்புகள், கோவையில் ரூ.1.72 கோடியில் தமிழ்நாடு
குடிசைப் பகுதி மாற்று வாரிய கோட்ட அலுவலகம், சென்னை மாதவரம் ஜம்புலி
காலனியில் சென்னை பெருநகர கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் மூலம் ரூ. 6
கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளன. இவற்றையும்
முதல்வர் திறந்துவைத்தார்.
திருச்சியில் நகர ஊரமைப்புத் துறை சார்பில் ரூ.1.56 கோடியில் மண்டல உதவி
இயக்குநர் அலுவலகம், உள்ளூர் திட்டக் குழும அலுவலக கட்டிடம்,
திருநெல்வேலியில் ரூ.1.93 கோடியில் மண்டல துணை இயக்குநர் அலுவலகம், உள்ளூர்
திட்டக் குழு அலுவலகம் என மொத்தம் ரூ.38 கோடி மதிப்பீட்டில்
கட்டப்பட்டுள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கட்டிடங்களை
முதல்வர் கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
புதிய மென்பொருள்
கட்டிட வரைபடம், மனைப் பிரிவு வரைபடம், நிலப்பயன் மாற்றம் குறித்த
உத்தேசங்களுக்கு கணினி மூலம் ஒப்புதல் வழங்கு வதற்காக ரூ. 2 கோடியே 60
லட்சத் தில் தயாரிக்கப்பட்டுள்ள மென் பொருளையும் முதல்வர் தொடங்கி
வைத்தார். இந்த புதிய மென் பொருள் பயன்பாட்டுக்கு வந்துள்ள தால்
www.tn.govt.in/tcp என்ற இணையதளத்தின் மூலம் கட் டிடங்களுக்கு அனுமதி பெற
விண் ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள் வதுடன்,
திட்ட அனுமதி ஆணை, ஒப்புதல் வழங்கப்பட்ட வரைபட நகல்களையும் இந்த இணைய
தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன்,
தலைமைச் செய லாளர் கிரிஜா வைத்தியநாதன், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்
துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.