தினமணி 02.06.2010
‘வந்தவாசி பூமாது செட்டிக்குளம் ரூ.40 லட்சத்தில் சீரமைக்கப்படும்’
வந்தவாசி, ஜூன் 1: வந்தவாசி பூமாது செட்டிக்குளம் ரூ.40 லட்சம் செலவில் அழகுப்படுத்தப்படும் என்று வேலூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியன் கூறினார்.
வந்தவாசி காமராஜர் நகர் அருகே ரூ.5 கோடி செலவில் கட்டப்பட்டுவரும் புதிய பஸ் நிலைய கட்டடப் பணிகளை செவ்வாய்க்கிழமை பார்வையிட்ட அவர் நிருபர்களிடம் கூறியது:
வந்தவாசி நகரில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க நகராட்சி சார்பில் செய்யாற்றில் ரூ.10 லட்சம் செலவில் புதிய கிணறு தோண்டப்பட்டு வருகிறது.
வந்தவாசியில் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஆடு அறுக்கும் தொட்டியில் ஆடுகளை அறுக்காமல் சாலையோர கடைகளில் ஆடு அறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வந்தவாசி புதிய பஸ் நிலையத்துக்கான அணுகு சாலை அமைக்க தனியாரிடம் நிலம் வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
மண்டல பொறியாளர் தனபால், நகர்மன்றத் தலைவர் க.சீனுவாசன், நகராட்சி ஆணையர் எஸ்.சசிகலா, பொறியாளர் மகாதேவன், இளநிலை பொறியாளர் அமுதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.