தினகரன் 29.11.2010
குறை தீர்க்கும் கூட்டத்தில் 45 மனு மீது உடனடி தீர்வுசெங்கல்பட்டு
, நவ.29: மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர், கூடலூர், கடம்பூர், காட்டாங்கொளத்தூர் பகுதி மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மறைமலைநகர் சமுதாயக் கூடத்தில் நேற்று நடந்தது.திருப்போரூர் எம்எல்ஏ மூர்த்தி தலைமை வகித்தார்
. நகராட்சி தலைவர் சசிகலா ஆறுமுகம் முன்னிலை வகித்தார். செங்கல்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் சோபியா, கிராம நிர்வாக அலுவலர்கள் ராமச்சந்திரன், கங்காதரன், ஜோஸ்வா, ஆர்.ஐ. லோகநாதன், கவுன்சிலர் ரவிகிருஷ்ணன், பாமக இளைஞரணி செயலாளர் சிவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதில்
, புதிய ரேஷன் கார்டு கேட்டு 255 பேரும், முதியோர் உதவித்தொகை கேட்டு 130 பேரும், இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் நிதியுதவி கேட்டு 5 பேரும், கலப்பு திருமண நிதியுதவி, மாற்றுத் திறனாளிகள் நிதியுதவி போன்றவை கேட்டு மொத்தம் 421 பேரும் மனு கொடுத்தனர். 45 மனுக்களை உடனே பரிசீலித்து ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.மூர்த்தி எம்எல்ஏ கூறுகையில்
, “அடுத்த குறை தீர்க்கும் நாள் கூட்டம் 15 நாளில் நடக்கும். காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், கூடுவாஞ்சேரி பேரூராட்சி, திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும்” என்றார்.