தினகரன் 31.08.2010
நாகர்கோவில் நகராட்சி பகுதியில் சேதமடைந்த 45 சாலைகளை சீரமைக்க மானியத்துடன் ரூ10 கோடி நிதி அரசிடம் கோரிக்கை விடுக்க அவசர கூட்டத்தில் முடிவு
நாகர்கோவில், ஆக.31: நாகர்கோவில் நகராட்சி பகுதியில் சேதமடைந்துள்ள சாலை களை சீரமைக்க மானியத்துடன்
ரூ10 கோடி நிதி உதவி கோரி அரசுக்கு கோரிக்கை அனுப்ப நக ராட்சி மன்ற அவசர கூட்டத்தில் மானிக்கப்பட்டது.
நாகர்கோவில் நகர்மன்ற அவசர கூட்டம் நேற்று (ஆக.30) நடந்தது. நகராட்சி தலைவர் அசோகன் சால மன் தலைமை வகித்தார். ஆணையர் ஜானகி, இன்ஜினியர் தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நாகர்கோவில் நகராட்சிக்குபட்ட சேதமடைந்த சாலைகளை சீரமை ப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் கடந்த ஆண்டில் 12 வது நிதிக்குழு பரிந்துரை திட்டம் மற்றும் நகராட்சி பொது நிதியுடன் 4.200 கி.மீ. சாலைகள் செப்பனிடப்பட்டுள்ளது. மேலும் 38.482 கி.மீ. சாலைகளை சரி செய்ய புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேற்படி சேதமுற்ற சாலைகள் அனைத்தையும் சரி செய்யும் அளவுக்கு நகராட்சி நிதி நிலை சீராக இல்லை என்பதால் சிறப்பு சாலைகள் திட்டம் 2010 &11 ன் கீழ் அரசுக்கு கோரிக்கை மனு சமர்ப்பித்து , முழு மானியத்துடன் சேதமடைந்த சாலைப்பணிகளை மொத் தம் ரூ1083.30 லட்சம் (சுமார் ரூ10 கோடி) மதிப்பில் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள மன்ற அனுமதி வேண்டுவதுடன், ஏற்கனவே இந்த நகர் மன்ற தீர்மானம் 384 (நாள் 20.8.2010ல்) கொண்டு வரப்பட்ட திட்டப்பணி தொடர்பான அனுமதியை ரத்து செய்யும் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் கவுன்சிலர்களின் விவாதத்துக்கு விடப்பட்டது. பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட 14 சிமென்ட் சாலைகள், 31 தார் சாலைகள் என மொத்தம் 45 சாலைகளை சீரமைக்க முழு மானியம் வழங்க கேட்டு அரசுக்கு கோரிக்கை அனுப்ப அனுமதிக்கப்பட்டது.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆர்.எம்.முருகன், சகாயராஜ், சேகர், அய்யப்பன், உதயக்குமார், மணிகண்டன், இந்திரா தாண்டவன், அழகம்மாள் தாஸ், பியாசா, வெங்கடேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் சிலர் நகர பகுதியில் ஆபாச சுவரொட்டிகள் ஒட்ட தடை விதிக்க வேண்டும். நகர் பகுதியில் நடைபெறும் பணிகளில் அந்தந்த பகுதி கவுன்சிலர்களின் பெயர்களும் கல்வெட்டில் பதிக்கப் பட வேண்டும். சரியாக பணி செய்யாத கான்ட்ராக்டர்களை கறுப்பு பட்டியலில் (பிளாக் லிஸ்ட்) வைக்க வேண்டும் என்று கூறினர்.