தினகரன் 14.06.2010
மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் 52 ஆயிரம் சதுர மீட்டரில் வருமான வரி அலுவலகம்புதுடெல்லி
, ஜூன் 14: மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் 52 ஆயிரம் சதுர மீட்டரில் வருமான வரி அலுவலகம் அமையவுள்ளது.டெல்லியைப் பொறுத்தவரையில் வருமான வரித்துறையின் வரிவசூல் மையங்கள் பாரகம்பா சாலை யிலுள்ள மயூர் பவன்
, ஐ.டி. ஓ.வில் உள்ள மத்திய வருவாய்கள் கட்டிடம் ஆகியவற்றில் இயங்கி வருகின்றன. வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வது உள்ளிட்ட வரி செலுத்துவோருக்கான பல்வேறு சேவைகள் இங்கு அளிக்கப்படுகின்றன.நேரடி வரிகளை வசூல் செய்வதில் நாட்டிலேயே டெல்லி வருமான வரித்துறை
2&வது இடத்தில் உள்ளது. ஆனால் போதுமான அலுவலக வசதிகள் இல்லாததால் சேவைகளை அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதைக் கருத்தில் கொண்டு, வருமான வரித்துறைக்கு புதிய அலுவலக வளாகத்தை வாங்குவதற்காக மத்திய அமைச்சரவை நிதி ஒதுக்கியது.இதையடுத்து மாநகராட்சி தலைமை அலுவலகமான டாக்டர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி சிவிக் சென் டரில்
(28 அடுக்குக் கட்டிடம்) வருமான வரித்துறைக்காக புதிய அலுவலக வளாகம் வாங்கப்பட்டுள்ளது. சென்டரின் ‘இ‘ பிளாக்கில் 52 ஆயிரம் சதுர மீட்டரில் வருமான வரித்துறை அலுவலகம் அமையவுள்ளது. 1,100 கார்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதியும் இங்கு உள்ளது. தேசிய தலைநகர் மண்டல நகரங்களைச் சேர்ந்த வரி செலுத்துபவர்களுக்கும் சில சேவைகளையும் இந்த புதிய அலுவலகம் அளிக்கும்.