தினமணி 03.10.2013
காந்தி ஜயந்தியன்று விற்கப்பட்ட 60 கிலோ ஆட்டு இறைச்சி பறிமுதல்
பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில்
காந்திஜயந்தியான புதன்கிழமை 6 ஆட்டு இறைச்சிக் கடைகளில் விற்பனை செய்த 60
கிலோ இறைச்சி மற்றும் அக்கடைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த 7 ஆடுகளை
நகராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்தனர்.
மகாத்மா காந்தியின்
கொள்கைகளில் ஒன்றான புலால் உண்ணக்கூடாது என்பதற்கு ஏற்ப அவரது பிறந்த நாளான
அக்டோபர் 2ஆம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தடையை
மீறி நகராட்சியில் 6 இடங்களில் இறைச்சிக்கடைகளில் விற்பனை செய்வதாக
நகராட்சி பணியாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் ஆணையர்
தங்கப்பாண்டி (பொ) தலைமையில் சுகாதார ஆய்வாளர் சீனிவாசன், சுகாதார
அதிகாரிகள் மாரிமுத்து, குமார் மற்றும் நகராட்சி பணியாளர்களுடன் ஆய்வு
மேற்கொண்டனர். அப்போது அனுமதியின்றி விற்பனை செய்த 60 கிலோ இறைச்சியை
பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் இறைச்சிக்காக
கட்டப்பட்டிருந்த 7 ஆடுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.