தினமணி 16.08.2013
தினமணி 16.08.2013
தில்− மாநகராட்சி அலுவலகங்களில் 67-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்
நாட்டின் 67-ஆவது சுதந்திர தினம் உற்சாகத்துடனும், பாரம்பரியத்துடனும் தில்லியில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மாநகராட்சிகள், முனிசிபல் கவுன்சில்,
அரசியல் கட்சி அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில்
சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் தலைமை அலுவலகம் பாலிகா கேந்திராவில்
நடைபெற்ற சுதந்திர தின விழாவில், என்.டி.எம்.சி. தலைவர் ஜலஜ் ஸ்ரீவாஸ்தவ்
தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
அவர் பேசுகையில், “அனைவரும் தங்கள் கடமைகளை செய்து, நாட்டை
முன்னேற்றுவதற்குப் பாடுபட வேண்டும். சுதந்திரத்துக்காக தங்களை
அர்ப்பணித்துக் கொண்ட தலைவர்களின் வழி நடக்க வேண்டும்’ என்றார்.
விழாவில், என்.டி.எம்.சி. பள்ளி மாணவர்களின் தற்காப்புக் கலை சாகசமும்,
நாட்டுப்பற்றுப் பாடல்களுக்கான நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
என்.டி.எம்.சி. உறுப்பினர்கள் அசோக் ஒüஜா, ஐ.ஏ. சித்திக், என்டிஎம்சி செயலாளர் விகாஸ் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநகராட்சிகள்: சிவிக் சென்டரில் வடக்கு தில்லி மேயர் ஆசாத் சிங்கும், தெற்கு தில்லி மேயர் சரிதா செüத்ரியும் கொடி ஏற்றினர்.
மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள், உயர் அதிகாரிகள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
கிழக்கு தில்லி மாநகராட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பட்பர்கஞ்ச்
தொழிற்பேட்டை உத்யோக் சதனில் மேயர் ராம் நாராயாண் தூபே தேசியக் கொடியை
ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதையொட்டி, மாநகராட்சிப் பள்ளி
மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.