தினகரன் 02.11.2010
உள்ளாட்சி தின விழாவில் 69 கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி நகராட்சி தலைவர் வழங்கினார்குன்னூர், நவ.2:உள்ளாட்சி தின விழாவை முன்னிட்டு குன்னூர் நகராட்சி வளாகத்தில் நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் ஆனந்தகுமார், ஜெகநாதன், அனீபா, சார்லி ஆகியோர் வாழ்த்தி பேசினர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் பூமாலை வரவேற்றார். நிகழ்ச்சியில் 69 கர்ப்பிணிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.4 லட்சத்து 14 ஆயிரம் வழங்கி நகராட்சி தலைவர் ராமசாமி பேசுகையில், ‘கடந்த 4 ஆண்டுகளில் ரூ.37 கோடி மதிப்பில் நடைபாதை, தெரு விளக்கு, சாலை சீரமைப்பு, தடுப்பு சுவர், குடிநீர் உள்ளிட்ட முக்கிய பணிகளுக்காக நிதி செலவிடப்பட்டுள்ளது.
மேலும் ரூ
.20 கோடி அளவிற்கு நிதி அரசிடம் கோரப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு வாரத்தில் இந்த நிதியும் கிடைக்க பெற்று மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும். நகர பகுதியில் இலவச கலர் டிவி, சமையல் எரிவாயு இணைப்பு, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நல திட்ட உதவிகள் 60 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அடுத்த மாதம் விடுபட்ட பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்படும்
. கர்ப்பிணிகள் 2 ஆயிரம் பேருக்கு இதுவரை ரூ.12 லட்சம் வரை உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மானிய கடனுதவி மற்றும் மானிய தொகை என ரூ.20 லட்சத்திற்கு மேல் வழங்கப்பட்டுள்ளது.நகரை மேம்படுத்த நகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
. நகராட்சி நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார். இதில், கவுன்சிலர்கள் முருககுமார், அந்தோணிராஜ், சாந்தா, பார்வதி, மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.