தினகரன் 13.10.2010
தாந்தோணியில் துப்புரவு பணிக்கு 75 கூடுதல் பணியாளர் அனுமதி கேட்டு நகராட்சியில் தீர்மானம்
கரூர், அக்.13: தாந்தோணி நகராட்சி அவசர கூட்டம் நேற்று நகர்மன்ற தலைவி ரேவதி ஜெயராஜ் தலைமை யில் நடைபெற்றது. துணைத்தலைவர் வசந்தாமணி, செயல் அலுவலர் தெய்வசிகாமணி, உறுப்பினர்கள் பெ.ரவி, பிஎம்.ரவி, மாரியம் மாள், செல்வராஜ், லட்சுமி, ராதாகிருஷ்ணன், ராஜூ, பாபுகுமார், கண்ணகி, மகாலிங்கம், பழனிச்சாமி, ஏகாம்பரம், பாலுசாமி, மணி யம்மை ஆகியோர் கலந்து கொண்டனர்.
1முதல் 13வார்டுகள் வரை தனியார் மூலம் ஒப் பந்த அடிப்படையில் பொது சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. பணிக்காலம் கடந்த ஆக ஸ்ட் மாதம் முடிவடையும் தருவாயில் மேலும் ஒரு ஆண்டு காலத்திற்கு டெண் டர் கோரப்பட்டது.
ஒப்பந்தப் புள்ளிகள் உறுதி செய்யப்படாததால், பொதுசுகாதார பணிகள் அவசர அவசியம் கருதி, கலெக்டரால் நிர்ணயிக்கப்பட்ட தினக்கூலி அடிப்படையில் பணியாளர் கள் நியமிக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்பட்டது. இவர்களுக்கு தினக்கூலி வழங்குவது, தாந்தோணி நகராட்சி 18 வார்டுகளை கொண்டது. கலெக்டர், எஸ்பி அலுவல கம் மற்றும் அனைத்து தலைமையிடத்து அலுவலகங்களும் அமைந்துள்ளது. 1முதல் 13வது வார்டுகள் வரை ஒப்பந்த அடிப்படையிலும், 14 முதல் 18வார்டுகள் வரை நகராட்சி துப்புரவு பணியாளர்களைக் கொண் டும் பொது சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. நடப்பாண்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதில் கோர்ட்டில் வழக்கு தொரடப்பட்டது. அவசர அவசியம் கருதி தினக்கூலி அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு தற்காலிகமாக பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே கூடுதலாக 75 துப்புரவு பணியாளர்கள் புதிய பணியிடங்கள் அனுமதிக்க வேண்டி நகராட்சி நிர்வாக இயக்குனரை கேட்டுக்கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுகவினர் ஆட்சேபம் தெரிவித்தனர்.
முன்னாள் தலைவர் ரவி பேசுகையில், 40 நாட்களுக்கு பின்னர் இந்த தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது. இவ்வ ளவு அவகாசம் இருந்தும் ஏன் சிறப்புக்கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் அனுமதி பெறவில்லை. மேலும் தற்காலிக பணியாளர்கள் பலர் துப்புரவு பணியே செய்யவில்லை என்றார்.
செயல் அலுவலர் கூறு கையில், அவசரம் கருதி தலைவர் முன்அனுமதிபெற்று செய்யப்பட்டுள்ளது என்றார். அதற்கு ரவி கூறுகையில், அதில் தவறு இல்லை. ஆனால் மன்ற ஒப்புதலோ, நகராட்சிகள் நிர்வாக அதிகாரி ஒப்புதலோ இன்றி ஏன் செய்யப்பட்டது என கேட்டு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றார்.
தீர்மானத்திற்கு பெ.ரவி, ராதாகிருஷ்ணன், பாலுசாமி, பாபுகுமார், துணைத்தலைவர் வசந்தாமணி வேலுசாமி, காங் உறுப்பினர் மாரியம்மாள் ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்தனர்.