ஊட்டி படகு இல்ல ஏரி யில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கலக்காமல் இருக்க ரூ.9½ லட்சம் செலவில் நவீன கருவி அமைக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி படகு இல்ல ஏரி
ஊட்டி நகர மக்களின் குடி நீர் ஆதாரமாக விளங்கிய படகு இல்ல ஏரியில் கழிவு நீர் கலந்ததால் தற்போது அந்த நீர் மாசடைந்து காணப்படுகி றது. ஊட்டி நகரின் பிரதான கால்வாயான கோடப்பமந்து கால்வாயில் உள்ள கழிவுகள் அனைத்தும் ஊட்டி ஏரியில் கலக்கிறது.
இதன் காரணமாக படகு இல்ல ஏரியில் உள்ள தண்ணீர் துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து ரூ.4 கோடி செலவில் ஊட்டி ஏரி தூய்மைப் படுத்தப் படும்என்று தமிழக முதல்– அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதன் படி ரூ.1.25 கோடி செல வில் கோடப்பமந்து கால்வாய் தூர் வாரப்பட்டது.
ரூ.9½ லட்சம் செலவில் கருவிகள் அமைப்பு
கோடப்பமந்து கால்வாயில் இருந்து அடித்து வரப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் ஊட்டியில் ஏரியில் கலக்காமல் இருக்க ஏரியும், கால்வாயும் இணையும் இடத் தில் தடுப்பு வளைக்கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பு கம்பியில் சேகர மாகும் குப்பைகளை அகற்ற தற்போது ரூ.9.5 லட்சம் செலவில் நவீன கருவி பொருத்தும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. இது குறித்து பொதுப்பணி துறை பொறியாளர் (நீர் ஆதார பிரிவு) ரமேஷ் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறிய தாவது:–
கழிவு நீர் உந்து நிலையம்
ஊட்டி ஏரியும், கால்வாயும் இணையும் இடத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் சேகரமாகும் குப்பைகளை தற்போது மனி தர்களே அகற்றி வருகின் றனர். இதனால் அவர்கள் பல்வேறு பாதிப்பு களுக்கு ஆளாகின்ற னர். இதனை தவிர்க்க ரூ.9½ லட்சம் செலவில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நவீன கருவி வாங்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த கருவியை பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த கால் வாயில் மழைக்காலங்களில் வரும் நீர் ஏரிக்கு அருகில் உள்ள ராட்ச கிணற்றில் சேகரிக்கப் படும்.
இந்த கிணற்றில் சேகர மாகும் கழிவு நீர் ராட்சத மின் மோட்டார் கொண்டு காந்த லில் உள்ள கழிவு நீர் சுத்தி கரிப்பு நிலையத் திற்கு அனுப் பப்படும். இதற்காக கழிவு நீர் உந்து நிலையம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.