தினமணி 27.09.2013
அண்ணா நகரில் தொடர் சோதனை: சுகாதாரமற்ற இறைச்சி, உணவுகள் பறிமுதல்
தினமணி 27.09.2013
அண்ணா நகரில் தொடர் சோதனை: சுகாதாரமற்ற இறைச்சி, உணவுகள் பறிமுதல்
அண்ணாநகர் மண்டலத்தில் புதன்கிழமை நடத்தப்பட்ட
தொடர் சோதனையில் தரமற்ற இறைச்சி, உணவுப் பொருள்கள், புகையிலை போன்றவை
பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்தி: சென்னை அண்ணாநகர் மண்டலத்தில்
உள்ள அண்ணா நகர், செனாய் நகர், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், அயனாவரம்,
புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை
மேற்கொண்டனர்.
இதில், செனாய் நகரில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் 100 கிலோ சுகாதாரமற்ற
இறைச்சி, சாந்தி காலனியில் சுகாதாரமற்ற குளிர்பானங்கள் 20, தண்ணீர் கேன்கள்
8, 25 கிலோ உணவுப் பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வேலங்காடு
மயானத்தில் புதைக்கப்பட்டன.
இதேபோல, 8-ஆவது பிரதான சாலையில் 10 கிலோ பான்மசாலா, புகையிலை பொருள்கள்,
எம்.ஜி.ஆர். காலனியில் 2 டன் டயர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
சாந்தி காலனியில் குப்பைத்தொட்டி இல்லாத 9 கடைகளுக்கு ரூ. 500 வீதம் ரூ.
4,500 அபராதம் விதிக்கப்பட்டது. அதே பகுதியில் கொசு முட்டைகள் வளரும்
வகையில் சுகாதாரமற்ற முறையில்
கட்டுமானப் பணி நடைபெற்று வந்த கட்டடத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.