தினகரன் 21.06.2010
அதிகாரி தகவல் பெங்களூர் மாநகராட்சி பகுதியில் மின் விநியோக கணக்கெடுப்பு
பெங்களூர், ஜூன் 21:பெங்களூர் மாநகராட்சி பகுதியில் மின்விநியோகம் குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் இதற்கு ஒத்து ழைக்க வேண்டுமென்று பெஸ் காம் அதிகாரி வேண் டுகோள் விடுத்துள்ளார்.
பெஸ்காம் பொதுமேலாளர் பி.எம்.சத்தியபிரேமகுமார் கூறுகையில்,‘நிர்வாக முறையை மேம்படுத்தி, நவீனப்படுத்துவதற்காக மின்சார சொத்துகள், நுகர்வோர்சேவை போன்ற தகவல்கள் திரட்டப்படும். பெஸ்காம் அறிமுகப்படுத்தியுள்ள ‘மறுசீரமைக்கப்பட்ட துரிதப்படுத்தப்பட்ட மின்சார மேம்பாடு மற்றும் சீர்த்திருத்த திட்டத்தின்கீழ் கணக்கெடுப்புப்பணி நடக்கிறது. மின் இழப்பை தடுப்பதற்காக இத்திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இன்போசிஸ் மூலம் கணக்கெடுப்பு நடக்கிறது. பெஸ்காம் மற்றும் இன்போசிஸ் லோகோவுடன் கொண்ட அடையாள அட்டை வைத்திருக்கும் நபர்கள் எல்லா நுகர்வோரின் வளாகங்களுக்கும் சென்று கணக்கெடுப்பில் ஈடுபடுவார்கள். கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மின்சார மீட்டர்களை காண அனுமதிக்க வேண்டும். மேலும் வினாப்பட்டியல்படி கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். நுகர்வோரிடம் திரட்டப்படும் தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும். கணக்கெடுப்பில் பெறப்படும் தகவல்கள் மூலம் கணினிமயமாக்கப்பட்ட நுகர்வோர் தகவல்« மலாண்மைமுறையை செயல்படுத்த உதவியாக இருக்கும். இதனால் நுகர்வோரின் புகார்களுக்கு விரைவாக பதிலளிக்கவும் இத்தகவல்கள் பயன்படும் என்றார்.