தினமலர் 01.02.2010
அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு உத்தரவு
சென்னை : சாலை ஓரங்களில், நடைபாதைகளில் அனுமதியின்றி விளம்பர போர்டுகள், டிஜிட்டல் பேனர் களை வைப்பவர்கள் மீது, சட்டப்பூர்வ நடவடிக்கையை மாநகராட்சி எடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது
.சென்னையைச் சேர்ந்த “டிராபிக்‘ ராமசாமி தாக்கல் செய்த மனுவில், “சென்னையில் பல இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட் டுள்ளன. இதனால், பாதசாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, கோர்ட் உத்தரவை அமல்படுத்தாத சென்னை மாவட்ட கலெக்டர், சென்னை மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர், மேயர், மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என கூறியிருந்தார்.இம்மனுவை நீதிபதிகள் டி.முருகேசன், ஜனார்த்தனராஜா அடங்கிய “டிவிஷன் பெஞ்ச்‘ விசாரித்தது. சென்னை மாநகராட்சி சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன் ஆஜரானார்.
“டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: அனுமதியின்றி விளம்பர போர்டுகள் வைக்கப் பட்டிருந்தால், அதை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபாதைகள், பொதுமக்கள் செல்லும் இடங்களில் அனுமதியின்றி விளம்பர போர்டுகள், டிஜிட்டல் பேனர் கள் வைப்பவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக் கையை, சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் எடுக்க வேண்டும். இவ்வாறு “டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட் டுள்ளது.