தினமணி 20.08.2013
தினமணி 20.08.2013
அனுமதியின்றி வைத்துள்ள விளம்பரங்கள் அகற்றப்படும்
சிவகாசியில் நகராட்சியின் அனுமதிபெறாமல்
வைக்கப்பட்டுள்ள விளம்பர தட்டிகள் அகற்றப்படும் என நகர்மன்றத் தலைவர்
வெ.க.கதிரவன் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:
நகராட்சிக்கு சொந்தமான சாலையில், சாலையின் நடுவில் உள்ள டிவைடரில்,
துளையிட்டு தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் விளம்பர தட்டிப்போர்டு
வைத்துள்ளனர். மேலும் சாலையில் பல இடங்களிலும் இந்த மருத்துமவனையினர்
விளம்பர போர்டு வைத்துள்ளனர். இந்த விளம்பர போர்டுகள் வைப்பதற்கு
மருத்துவமனை நிர்வாகம் நகராட்சியில் அனுமதி பெறவில்லை. எனவே இவை அனைத்தும்
அகற்றப்படும். மேலும் நகராட்சியின் சொத்தை தேசப்படுத்தியதாக வழக்குத்
தொடரப்படும். இதுபோல நகரின் பல இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள விளம்பர
போர்டுகள் அகற்றப்படும் என்றார்.