தினமணி 16.01.2014
அன்னூர் பேரூராட்சியில் வரி செலுத்த வேண்டுகோள்
அன்னூர் நகராட்சியில் வரிசெலுத்தாதவர்கள் உடனடியாக வரி செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அன்னூர் பேரூராட்சித் தலைவர் ராணி, செயல் அலுவலர் கல்யாணசுந்தரம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
- அன்னூர் பேரூராட்சியில் நடப்பாண்டில் அரசு நிதி, சட்டபேரவை உறுப்பினர் நிதி, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் பொது நிதி உள்ளிட்ட நிதிகளிலிருந்து தற்போது ரூ. 4 கோடி மதிப்பீட்டில் 15 வார்டுகளிலும் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- மேலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட உள்ளதால், மக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர்க் கட்டணம், வணிக நிறுவனங்களின் உரிமக் கட்டணம் உள்ளிட்டவற்றை ஒருவார காலத்திற்குள் செலுத்த வேண்டும்.
சில பகுதிகளில் சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் ஆகியவை பல ஆண்டுகளாக
செலுத்தப்படாமல் உள்ளன. அதனால் பல வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆகவே, வரி செலுத்தாதவர்கள் உடனடியாக வரிகளைச் செலுத்த வேண்டும்.
இல்லையெனில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படுவதுடன், நகராட்சி சட்டப்படி
நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.