அம்மா உணவகங்கள் நெல்லையில் இன்று திறப்பு
திருநெல்வேலி மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை விடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கிறார்.
இது தொடர்பாக திருநெல்வேலி மாநகராட்சி மேயர் விஜிலா சத்தியானந்த் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்திலுள்ள 9 மாநகராட்சிகளிலும் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) பிற்பகல் 3.30 மணியளவில் முதல்வர்
ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.
அதே வேளையில் திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தில் திறப்பு விழா நிகழ்ச்சி நடக்கிறது. இந்த விழாவில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் சி. சமயமூர்த்தி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் முருகையாபாண்டியன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றார் அவர்.