தினமணி 25.06.2013
தினமணி 25.06.2013
அரசுத் தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்குப் பரிசு
ஆம்பூர் நகராட்சி 36-வது வார்டை சேர்ந்த அரசுத்
தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா அழகாபுரி நகராட்சி
தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நகர்மன்ற உறுப்பினர் கே. மணி தலைமையில் நடைபெற்ற விழாவில், மாணவர்கள்
கே. பாலாஜி, வி. ஆதித்யன் ஆகியோருக்கு பரிசு கேடயங்களை நகர்மன்றத் தலைவர்
சங்கீதா பாலசுப்பிரமணி வழங்கினார் . இரு மாணவர்களுக்கும் தலா ரூ.1,000-த்தை
தொழிலதிபர் ஹரிஹரன்-சித்ரா தம்பதி வழங்கினர்.
நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எல். குமார், வார்டில் உள்ள முக்கிய
பிரமுகர்கள் எஸ். வெங்கடேசன், ஸ்ரீதர், முருகன், மனோகரன் உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.