அரசு விதிகளை மீறினால் நடவடிக்கைபள்ளிகளுக்கு நகராட்சி சேர்மன் எச்சரிக்கை
கடலூர்:கடலூரில் அரசு விதிகளின்படி மாணவர்களுக்கு அடிப்படை வசதி செய்து தராத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி சேர்மன் சுப்ரமணியன் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கடலூர் நகராட்சி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்படவுள்ளது. பல பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என புகார் வந்துள்ளது.எனவே நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளில் 50 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிப்பறையும், 200 மாணவர்களுக்கு ஒரு கழிவறை வசதி ஏற்படுத்தியிருக்க வேண்டும். மேலும் பள்ளி வகுப்பறைகள் காற்றோற்ற வசதியுடன் இருக்க வேண்டும்.
சிறுநீர் கழிக்கும் இடம், கழிவறைகளில் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்க வேண்டும்.பள்ளிகளின் வெளியில் சுகாதாரமற்ற உணவு பண்டங்களை விற்பதை தவிர்க்க வேண்டும். பள்ளியின் சுற்றுச் சூழல் சுகாதாரமாக இருக்க வேண்டும். அரசு விதிகளை பின்பற்றாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இதற்காக நான், கமிஷனர் மற்றும் சுகாதார அதிகள் கொண்ட குழு பள்ளிகளை திடீர் ஆய்வு செய்யும். இவ்வாறு சேர்மன் கூறினார்.