தினமணி 06.08.2010
அரியலூர் நகராட்சிப் பகுதியில் விளம்பரத் தட்டிகள் நிறுவ கட்டுப்பாடுகள்
அரியலூர்
, ஆக. 5: அரியலூர் நகராட்சிப் பகுதியில் விளம்பரத் தட்டிகள் நிறுவ கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இதுதொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு
:அரியலூர் நகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பதாகைகள்
– பலகைகள்– தட்டிகளை தாற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ நிறுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறுவது அவசியம். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் விளம்பரங்களை நிறுவ வேண்டும்.மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்கும் இடத்தில்தான் விளம்பரத் தட்டிகளை நிறுவ வேண்டும்
. மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி நிறுவப்படும் விளம்பரங்கள் முன்னறிவிப்பின்றி உடனடியாக அகற்றப்படும். நகர்ப் பகுதியில் அதிகபட்சமாக 10-க்கு 15 அடி என்ற அளவில் மட்டுமே விளம்பரத் தட்டிகளை நிறுவ வேண்டும்.தாற்காலிகமாக விளம்பரம் செய்ய சதுர மீட்டர்க்கு ரூ
. 50 வசூலிக்கப்படும். இந்தத் தொகையை நகராட்சி அலுவலகத்தில் செலுத்திய பிறகே, விளம்பரத்தை நிறுவ வேண்டும். அரசியல் கட்சிகளின் விளம்பரத் தட்டிகள் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்னதாக நிறுவிக் கொள்ளலாம்.நிகழ்ச்சிகள் முடிந்த இரண்டு நாள்கள் வரைக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்படும்
. அதன் பின்னர் உரிமையாளரே அதை அகற்றிக் கொள்ள வேண்டும். விளம்பரத் தட்டிகள் நிறுவ அனுமதி கோரும் அனைவரும் இந்த விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.