அரியலூர் நகராட்சி பகுதியில் வளர்ச்சிப்பணிகள் கலெக்டர் ஆய்வு
அரியலூர் நகராட்சி பகுதி வளர்ச்சிப்பணிகளை மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் ஆய்வு மேற் கொண்டார்.
கலெக்டர் ஆய்வு
அரியலூர் நகராட்சி பகுதி யில் மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் நடந்து சென்று ஒவ் வொரு பகுதிகளில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்யு மாறு அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.
பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மக்களின் குறை களை மனுக்களாக வழங்கு மாறு கேட்டு கொண்டார் அவ்வாறு வழங்கப்படும் மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் தெரி வித்தார்.
தண்ணீர் தேங்காமல்
சின்னக்கடை தெருவில் சாலையை மேம்படுத்தி சாலை அமைக்குமாறு உத்தர விட்டார். காந்தி காய்கறி மார் கெட்டில் உள்ள சாக் கடை யினை புதிய வழித்தடம் அமைத்து தண்ணீர் தேங்கா மல் பார்த்து கொள்ளுமாறு நகராட்சி ஆணையருக்கு உத்தர விட்டார்.
மார்க்கெட் பகுதியை சுகா தார முறையில் வைத்து கொள்ள வேண்டும். கழிவு களை உடனடியாக அப்புறப் படுத்தி பொதுமக்கள் வந்து செல்ல சுகாதாரமாக மார்க் கெட்டை வைத்திருக்க வேண் டுமென உத்தர விட்டார்.
மார்க்கெட்டுக்கு வந்து செல்லும் லாரிகள் உடனடி யாக சரக்குகளை இறக்கி விட்டு செல்ல வேண்டும். பாதையின் குறுக்கே வெகு நேரமாக நிற்க கூடாது என தெரிவித்தார்.
ஆக்கிரமிப்புகள்
சிங்காரத் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடி யாக அகற்ற உத்தரவிட்டார். பாதாள சாக்கடை திட்ட பணிகளை முழுமையாக ஆய்வு செய்து பாதாள சாக் கடை திட்டத்திற்கு எடுக்கப் பட்டுள்ள மண்ணை உடன டியாக அப்புறப் படுத்திட அலு வலர்களுக்கு உத்தரவிட் டார். மேலும், சாக்கடையில் அடைத்து கொண்டு உள்ள மண்ணை உடனடியாக அப்புறப்படுத்தி சாக்கடையில் நீர் தேங்கா வண்ணம் இருக்க வேண்டும் என உத்தர விட்டார்.
புதிய மார்க்கெட் தெருவின் அருகில் உள்ள அரசு கல்லூரி பிற்படுத்தப்பட்டோர் மாண வர் விடுதியினை ஆய்வு செய்து மாணவர்களுக்கு உணவு, குடிநீர், இருப்பிட வசதிகள் முறையாக உள்ளதா என ஆய்வு மேற் கொண் டார்.
பஸ் நிலையம்
காயிதேமில்லத் சாலை, சின்னக்கடை தெரு, பால் பண்ணை பகுதிகளை ஆய்வு செய்து சாலைகளை உடனடி யாக சீரமைக்குமாறு அலு வலர்களுக்கு உத்தர விட் டார். செந்துறை சாலையில் பஸ் கள் வந்து செல்லும் வண்ணம் பாதையை சீரமைக்குமாறு உத்தர விட்டார்.
அரியலூர்பஸ் நிலையத்தை ஆய்வு செய்து பஸ்கள் வந்து செல்ல எந்த இடையூறும் இல்லாமல் பொதுமக்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்கு மாறு மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் நகராட்சி ஆணைய ருக்கு உத்தர விட்டார்.
யார்-யார்?
இவ்வாய்வின்போது, அரியலூர் நகராட்சி ஆணை யர் சரஸ்வதி, பொறி யாளர் துரை கண்ணன், துப்புரவு ஆய்வாளர் செல்வ மணி, அரியலூர் நகர்மன்றத் தலைவர் முருகேசன், உறுப் பினர்கள் மாலாதமிழரசன், குணா, பாபு மற்றும் அலு வலர்கள் உடனிருந்தனர்.