தினமலர் 01.06.2010
அரூர் பழக்கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை
அரூர்: அரூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பழக்கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.அரூர் டவுன் பஞ்சாயத்து சுகாதார பிரிவு அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் பழக்கடைகளில் “கார்பைட்‘ கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து திடீர் சோதனை செய்தனர். “கார்பைட்‘ கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அழித்தனர். இச்சோதனையில் அரூர் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் ஞானம், வட்டார சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், சின்னமாரி, சாதிக்பாட்ஷா, ராஜேந்திரன், வடிவேல், துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.