தினமலர் 19.04.2010
அறந்தாங்கியில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை முகாம்
அறந்தாங்கி: அறந்தாங்கியில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிசிச்சை முகாம் நடந்து. அறந்தாங்கி நகராட்சியும், திருச்சி இண்டர்நேஷனல் அனிமல் ரெஸ்க்யூ நிறுவனமும் இணைந்து நடத்திய இம்முகாமை நகராட்சி தலைவர் மாரியப்பன் தொடங்கி வைத்தார். கவுன்சிலர்கள் ராமசாமி, ராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் முதல்கட்டமாக 5 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிசிச்சை செய்யப்பட்டது. இது குறித்து நகராட்சி தலைவர் கூறுகையில் நகரில் 540 தெருநாய்கள் இருப்பதாகவும், இவை அனைத்திற்கும் கருத்தடை அறுவைசிகிச்சை செய்யப்படும். இதற்கு ஒரு நாய்க்கு ரூ. 435 செலவாகும், அதில் பாதி தொகையை நகராட்சி நிர்வாகம் வழங்கும் என்றார்.கால்நடைதுறை உதவி இயக்குநர் சுந்தர்ராஜன், திருச்சி கால்நடை மருத்துவர் ஜோதிபாசு, அறந்தாங்கி கால்நடைமருத்துவர் தெட்சிணாமூர்த்தி ஆகியோர் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்தனர்.துப்புரவு அலுவலர் சங்கரசபாபதி, துப்புரவு ஆய்வாளர் சேகர், பணிமேற்பார்வையாளர்கள் பாலகிருஷ்ணன், செல்வேந்திரன், ஆத்மநாதன், செல்வராசு, அலுவலக உதவியாளர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.