தினகரன் 28.06.2010
அலுவலகங்களில் ஒளிரும் பெயர் பலகை
மஞ்சூர், ஜூன் 28: கோவையில் கடந்த 23ம் தேதி துவங்கிய உலக தமிழ் செம்மொழி மாநாடு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதனை நினைவுகூறும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் ஓளிரும் மின் விளக்குகளால் ஆன தமிழ் வாழ்க் என்ற பெயர் பலகை வைக்க வேண்டும் என்று துணை முதல்வர் ஸ்டாலின் கேட்டு கொண்டார். மாநாடு நிறைவு தினத்தின்று பெயர் பலகையை வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இதையடுத்து அனைத்து அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் தமிழ் வாழ்க என்று ஒளிரும் பெயர் பலகை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கீழ்குந்தா பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று முன் தினம் இரவு ‘தமிழ் வாழ்க’ என்ற ஒளிரும் பெயர் பலகை அமைக்கப்பட்டது.
இதனை பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பார்த்து சென்றனர். மஞ்சூர் சுற்றுப்புற பகுதியிலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதுபோன்ற ஒளிரும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
உலக தமிழ் செம்மொழி மாநாட்டை நினைவு கூறும் வகையில் கீழ்குந்தா பேரூராட்சி அலுவலகத்தில் ‘தமிழ் வாழ்க’ என்று ஒளிரும் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது.