தினமணி 06.11.2013
ஆத்தூரில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
ஆத்தூர் பேரூராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட
பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனை செய்தவர்களுக்கு
அபராதம் விதிக்கப்பட்டது.
பேரூராட்சி மன்றத் தலைவர் முருகானந்தம்
ஆலோசனையின்பேரில் செயல் அலுவலர்(பொறுப்பு) ச.குமரேசன் தலைமையிலான குழுவினர்
ஆத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது 4,300 கிலோ
கிராம் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வியாபாரிகளுக்கு
அபராதம் விதிக்கப்பட்டது.