தினமலர் 12.05.2010
ஆம்பூர் நகராட்சியில் பயிற்சி வகுப்புகள்
ஆம்பூர்:ஆம்பூர் நகராட்சியில் மக்கள்தொகை கணக்கெடுப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஆம்பூர் நகரமன்ற கூடத்தில் நடந்தது.வகுப்புகள் துவக்க விழாவிற்கு நகராட்சி தலைவர் நசீர்அகமது தலைமை தாங்கினார். ஆணையாளர் உதயராணி முன்னிலை வகித்தார். மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குனரகத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவஞானம் கலந்து கொண்டார். முதுநிலை பயிற்சியாளர் உதயகுமார் பயிற்சி அளித்தார்.முகாமில் 4 அணிகளுக்கு 17ம் தேதி வரை பயிற்சிகள் வழங்கப்படுகிறது.