தினத்தந்தி 07.02.2014
ஆம்பூர் நகராட்சி சத்துணவு மையங்களுக்கு மிக்சி நகரசபை தலைவர் வழங்கினார்

ஆம்பூரில் நகராட்சி மூலம் செயல்படும்
சத்துணவு மையங்களுக்கு அரசின் விலையில்லா மிக்சி வழங்கும் நிகழ்ச்சி
நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகரசபை தலைவர் சங்கீதா தலைமை தாங்கி
சத்துணவு மையங்களுக்கான மிக்சியை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆணையாளர் (பொறுப்பு)
எல்.குமார், மேலாளர் ஜெயபிரகாஷ், பிரேம், நிஷாத்துன்னிசா மற்றும் நகரசபை
உறுப்பினர் பி.கே.மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.