தினத்தந்தி 12.12.2013
ஆம்பூர் நகராட்சி பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா

ஆம்பூர்
அழகாபுரி நகராட்சி தொடக்கப்பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா
கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஜேசி தலைவர் விஸ்வநாத் தலைமை தாங்கினார்.
தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்று பேசினார்.
நகரசபை உறுப்பினர் கராத்தே மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஜேசி பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில்
ஆசிரியை சுமதி நன்றி கூறினார்.