தின மணி 18.02.2013
ஆம்பூர் நகரில் கழிவுநீர் கால்வாய் பணி:நகர்மன்றத் தலைவர் ஆய்வு
ஆம்பூர் நகராட்சி மளிகைதோப்பு ரத்னாநகர் பகுதியில் ரூ.5 லட்சம் செலவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை நகர்மன்றத் தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதிமுக நகரச் செயலர் எம். மதியழகன், அதிமுக நிர்வாகி அன்வர் பாஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.