தினகரன் 27.08.2010
ஆறுமுகநேரி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்
ஆறுமுகநேரி, ஆக. 27: ஆறுமுகநேரி பேரூராட்சி கவுன்சிலர்கள் குழு கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி முத்துகிருஷ்ணன், துணைத்தலைவர் காந்தி என்ற சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதிகளில் 2010&2011 பொதுநிதி திட்டத்தில் குடிநீர் பேரூராட்சி பகுதிகளில் பைப்லைன் விஸ்தரிப்பு செய்து குடிநீர் வினியோகம் சீராக வழங்கவும், திருச்செந்தூர் அடைக்கலாபுரம் மெயின்ரோட்டில் இருந்து தனியாக பைப்லைன் பதித்து ஏற்கனவே காமராஜபுரத்தில் உள்ள மெயின்குழாயில் இணைந்து குடிநீர் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், கவுன்சிலர்கள் லட்சுமணன், சுரேஷ், சங்கர், தெய்வக்கனி, கல்யாணசுந்தரம், கஸ்தூரிபாய், ரத்தினம், ஜெயராஜ், சந்திரன், சிவபெருமாள், செல்வி, செல்வி, மகாராஜன், ராமதுரை, புனிதா, கல்யாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்