தினமலர் 30.09.2010
இடிந்து விழும் நிலையில் பேரூராட்சி கடைகள்
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே கட்டப்பட்ட பேரூராட்சி கடைகளில் மேற்கூரை , சுவர்கள் விரிசலடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், வியாபாரிகள் அச்சம் கொண்டுள்ளனர்.
முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்ட்டை சுற்றிலும் பேரூராட்சி வணிக வளாகம் உள்ளது. 30 ஆண்டுகளுக்குள் அமைக்கப்பட்ட கடைகளின் மேற்கூரைகள், சுவர்கள் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது. அதிகாரிகளிடத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால், வியாபாரிகளே மராமத்து செய்யும் பணியில் ஈடுபட்டு, செலவினங்களை பேரூராட்சியிடம் ஒப்படைக்க போவதாக தெரிவித்துள்ளனர்.
வியாபாரிகள் கூறியதாவது: வாடகை மட்டும் வசூல் செய்யும் நிர்வாகம், இடிந்து விழுவதற்கு முன் சேதமடைந்த கடைகளை மராமத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’என்றார்.