தினத்தந்தி 20.06.2013
இடைப்பாடி நகராட்சி பகுதியில் குடிநீர் பணிகளை தலைவர், ஆணையாளர் ஆய்வு
இடைப்பாடி நகராட்சிக்கு என தனி குடிநீர் திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. தற்பொழுது 20-வது
வார்டு பகுதியில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பழைய
குடிநீர் குழாய் சேதமடைந்தது. இதனால் அந்த பகுதியில் சாயம் கலந்த குடிநீர்
வந்தது. இது குறித்து ஆணையாளர் புகழேந்தி, நகரமன்ற தலைவர் கதிரேசன் ஆகியோர்
அந்த பகுதிக்கு சென்று சேதமடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய நடவடிக்கை
எடுத்தனர். இது குறித்து ஆணையாளர் புகழேந்தி கூறும்போது, இடைப்பாடி
நகராட்சி பகுதியில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பழைய
குடிநீர் குழாய் நிறைய சேதமடைகிறது. இது குறித்து நகராட்சி அலுவலகத்தில்
உடனடியாக தெரிவித்தால் அதனை உடனே சரி செய்யப்படும் என்று தெரிவித்தார்.