தினமணி 31.07.2013
தினமணி 31.07.2013
இன்று கடலூரில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
கடலூர் நகராட்சிப் பகுதியில் புதன்கிழமை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் பா.காளிமுத்து கூறியது: கடலூர் நகருக்கு
சப்ளை செய்யும் போர்வெல்கள் கேப்பர் மலை, திருவந்திபுரம் மலையடிவாரத்தில்
உள்ளன. கேப்பர் மலையில் உள்ள துணைமின்நிலையத்தில் 30-ம் தேதி பராமரிப்பு
பணி மேற்கொள்ளப்பட்டது. அதனால் குடிநீர் மோட்டார் இயக்க முடியாத நிலை
உள்ளது.
இதன்காரணமாக 31-ம் தேதி கடலூர் நகரில் குடிநீர் விநியோகம் இருக்காது.
ஆகஸ்ட் 1-ம் தேதி வழக்கம்போல் குடிநீர் விநியோகம் வழங்கப்படும்.