தினமணி 26.06.2013
தினமணி 26.06.2013
இன்று மாநகராட்சி மன்றக் கூட்டம்
சென்னை மாநகராட்சியின் மன்றக்கூட்டம் புதன்கிழமை (ஜூன் 26) காலை ரிப்பன் கட்டடத்தில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் நீர்வழித் தடங்களில் வசிப்பவர்களுக்கு இலவச கொசுவலை,
வீடுகளுக்கு இலவச நொச்சி செடி வழங்கும் திட்டம், மேம்பாலப் பணிகள், அம்மா
உணவகங்களை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றின் கீழ் முக்கியத் தீர்மானங்கள்
நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழைநீர் கால்வாய்களில் கழிவுநீர் கலப்பது, புதுப்பிக்கப்படாத சாலைகள்,
நிலுவையில் உள்ள திட்டப்பணிகள் ஆகிய பிரச்னைகளை கூட்டத்தில் எழுப்ப
எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.