தினமணி 02.07.2013
தினமணி 02.07.2013
இறைச்சிக் கடைகளை முறைப்படுத்த ஆலோசனை
புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்
செயல்படும் இறைச்சிக் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு உள்ளாட்சி அமைச்சர் என்.ஜி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.
அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., புதுச்சேரி நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம்,
உழவர்கரை நகராட்சி ஆணையர் அழகிரி, நகராட்சி செயற்பொறியாளர் குணசேகரன்
உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
புதுச்சேரியில் உள்ள இறைச்சிக் கடைகளில் வெளிப்படையாக ஆடுகள், மாடுகள்
வெட்டப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று அமைச்சர் என்.ஜி.பன்னீர்செல்வம்
உத்தரவிட்டார்.